புலம்பெயர் நாட்டில் இருந்து வெளிவந்த முழுநீள திரைப்படம்முதல் குறும்படம் நாடகங்கள் வரை தாயகத்தில் இருந்தகாலம் தொட்டு பார்வையிட்டிருக்கிறேன். இருப்பினும் வெண்திரையில் எம்மவர் முழுநீள திரைப்படம் பார்த்தபோது எனது திரைப்படம் திரையிடப்பட்டதுபோல் ஒருமகிழ்ச்சி,
நதியில் பார்த்த பாஸ்கியை மீண்டும் தீராநதியில் பார்க்கிறேன். திரைக்கதை,தயாரிப்பு,இயக்கம் போன்றவற்ரில் பாஸ்கி தனது திறமையை மீண்டும் நிலை நாட்டி இருப்பது பாராட்டப்படவேண்டியதே. பாஸ்கியின் வழமையான பாணியிலே நடிப்பு தொடர்கிறது இருப்பினும் திரையில்வரும் அழுகைக்காட்சிகளில் மட்டும் பத்துவயது பாலகனை காண்கிறேன். கதாநாயகி பொபித்ரா நான் திரையில் முதல்முதலில் பார்க்கிறேன் சுமாரான நடிப்பை காணக்கூடியதாக இருந்தது. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் குறிப்பாக "இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டேன்" என்ற சம்பவத்தை வெளிப்படுத்தும் வேளையில் நடிப்பின் மேலதிக தேவை என்னால் உணரப்பட்டது. இதேவேளையில் சிறிதயாளனின் மிகமிக சாதாரணமான நடிப்பை அங்காங்கே காணக்கூடியதாக இருந்தது.
திரைப்படத்தின் காட்சி அமைப்புக்கள்,படப்பிடிப்பு,திருத்தி அமைக்கப்பட்டவிதம் தொழில்நுட்பதுறையில் எமது இளைஞர்களின் அகலக்கால் பதிப்பை பார்க்கிறேன்.
அதேவேளை அடிதடிக் கலாச்சாரத்தை முலக்கதையாக கொண்டும் அவ்வப்போது தொட்டுக் கொண்டும் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.ஆனால் அவற்ரையும்தாண்டி எமது சமூகத்தினுள் ஜாதி,மதம்,பணபலம் இவற்ரை அடிப்படையாக கொண்ட பிரச்சினைகள் இருக்கதான் செய்கிறது எதிர்காலப்படைப்புகளில் அவற்ரையும் உள்வாங்கிக் கொண்டால் நதியின் புதிய நீரை பயிர்கள் பெறமுடியுமே
பிரான்சு நாட்டின் திரைப்படத்துறை சார்ந்த பல கலைஞர்கள் திரைப்படத்தில் உள்வாங்கப்பட்டதாலோ என்னவோ நாடாவில் அவர்களுக்கான அளவு குறைவாகவே உள்ளது. அதேவேளை திரைப்படத்தின் தொய்வற்ற தன்மை மிக பாராட்டப்படவேண்டியதே ஆனால் இவை இரண்டுமே ஒரு முழுநீள திரைப்படத்தை பார்த்து முடித்தவேளையிலும் ஒரு குறும்பட உணர்வை சற்ரே என்னுள் உணர்த்திச்சென்றது
எது எவ்வாறு இருப்பினும் வரையருக்கப்பட்ட வளங்களுடன் (தொழிநுட்பம் முதலீடு) இவ்வாறு ஒரு திரைப்படத்தை வெளியிட்டது பாஸ்கியின் வாழ்கைச் சாதனையே,,
ஆக அங்கு இராணுவ ஆதிக்கமும்,பாலியல் வல்லுறவுகளும் தீரும்...இந்கு வன்முறைகளும்,ஆயுத கலாச்சாரமும் தீரவேண்டும்... காதலும்,கண்ணீரும்,பிரிவும் எங்கும் தீராதே,,,,,,,