கொஞ்சநாளா கூட்டமைப்புகாறர் பிளையிற் ஏறிஇறங்கிறதே வேலையாபோச்சு^^^ போனமாம் நாடுகள பாத்தமாம் வந்தமாம் எண்டு இருக்கவேணும் :-) சும்மா அறிக்கையள விட்டு இப்பதான் கொஞ்சம் பெருழூச்சுவிடுற சனங்களுக்கு ஆயுதம் முடிஞ்சுது,அரசியல் திரும்புது எண்டு திரும்பவும் தலையில மண்ணள்ளி போடுறவேலைய பாக்கம இருந்தா சந்தோசம்.அரசியல்ல தாங்கள் இருக்கிறத சனம் மறந்துபோகுங்கள் எண்ட பயமும் இருக்குது ;p அதுக்காகவே சிலபேர் அறிக்கை விடுறதும் பாத்திருக்கிறன் ;@ படுக்கைக்கு போகேக்க ஒண்டும் படுத்தெழும்பி வந்தா வேறஒண்டும் இவயுன்ர அறிக்கையள என்னெண்டுதான் சொல்லுறது.கொஞ்ச காலமா ஏகபிரதிநிதிகள் நாங்கள் எண்டுச்சினம் ! இப்ப கேட்டா அவை யாரு எண்டுகேப்பினம் :( என்னதான் இருந்தாலும் உதுக்குள்ள பலபேர் சூரியதேவனுக்கு காலம் முழுக்க கடமப்பட்டு இருக்கினம்: இருக்கிற பதவி அவர்போட்ட பிச்சை தானே ;D கிழக்கு பக்கமா அரிவடை செய்யுற கூட்டமைப்புகாரர் கொஞ்சநாளா ழூச்சு பேச்சு இல்லாம கிடந்தவர் இப்ப கொஞ்சம் கலையாடப்பாக்கிறார் :§) அவர வினாயகப் பெருமானும் கருணை அம்மனும் அடக்கிபோடுவினம் ;p கேட்டா பச்ச கட்சிகாரர் இருமுகம் காட்டினமாம்,நீங்கள் பலமுகம் காட்டேக்க சகோதர மொழிபேசுறவயள் இருமுகம் காட்டுறது ஒண்டும் தப்பில்லதானே,, என்னவோ எங்கட சனத்தின்ர பாடு "ஒருமுகமோ பலமுகமோ முகம்முழுதும் கலவரமோ" எண்டு கலவரத்திலதான் தொடரபோகுது,,,,, :(

No comments:
Post a Comment