Wednesday, October 13, 2010

யாரொடுநோகேன் யார்க்கெடுத்துரைப்பேன்,,,

by Mahan Mayuran on Wednesday, 13 October 2010 at 16:50
 

 வெளி நாட்டில இப்ப பலபேருக்கு வேலை இல்லாம போய் கொண்டு இருக்குது,ஒண்டு பொருளாதாரளாதாரத்தில ஏற்பட்டவீழ்ச்சி மற்றது குளிர் காலம் தொடங்குது.வேல வெட்டி இல்லாட்டி வீட்டுக்கிள்ள படுத்து கிடக்கலாம் அரசாங்கம் காசு குடுக்கும்,அதவிட்டுட்டு எழுச்சி பொங்போணும் பொங்கோணும் எண்டு சும்மா சிவனே எண்டு வேலைகுபோறவன கூப்பிட்டு விட்டு அவனுக்கும் வேலை இல்லாம போய் ஐயோ ஐயோ! நாட்டில சண்டை நடக்கேக்க போராட்டம் போராட்டம் எண்டு குதிச்சம் நியாயம்தான்.அப்புறமா ஆர்ப்பாட்டம் எண்டு சொல்லி யெனீவாக்கும் பெல்யியத்துக்குமா ஏத்தி இறக்கினியள் எதுவுமே ஆகல.முள்ளிவாய்காலோட முடிவுக்டி எல்லாமே புத்ச்சாச்சு பிறகு என்ன இழவுக்கு நடக்க வெளிக்கிட்டனியள்,கேட்டா நீதிக்கான பயணம் எண்டுறியள் டேய் முள்ளிவாய்க்கால்ல இவ்வளவு சனம் சாகேக்க நீதி தரார உலகமாடா நீங்க நடந்து நீதி தரப்போகுது.செற் செற்ரா நடந்தியள் இப்ப என்ன எண்டா கவட்டுக்க சைக்கிள் வச்சுக் கொண்டு வெளிகிட்டுட்டியள்.கேட்டா நீதிக்கான பயணம் எண்டுறியள்.வேலய பாருங்கடா !சனம் செல்சத்தம் இல்லாம இப்பதன் கொஞ்சம் அமைதியா இருக்குதுகள்.நீங்கள் நீங்கள் பேப்பரில படம் வாறதுக்கும் ரீவீ ல பேட்டி குடுக்கிறதுக்கும் ஏன்டா அப்பாவி சனத்த இழுத்துப்போட்டு ஆட்டுறியள்.பேமஸ் ஆகோணும் எண்டா சினிமாப்படம் எடுங்கோடா ;) வேல வெட்டி இல்லாம நடக்கிறவனுக்கும் ஓடுறவனுக்கும் ஆதரவு தெரிவிப்பது தொடர்பா பெண்கள் அமைப்பு கூட்டம் கூட்டி இருக்கினம் ;) அடிப்பாவிகளா காலமயும் பின்னேரமுமா கோப்ப கழுவிபோட்டு வாற மனுசனுக்கு சமச்சு போடக்காணம் நீங்கள் ஆதரவு குடுக்க போறியள் :( உங்கட உங்கட வேலயள நீங்கள் ஒழுங்கா செய்யுங்கோ அடக்கி வாசிக்க பாருங்கோ,,,காலம் எல்லாதுக்கும் பதில் சொல்லும்

Sunday, October 10, 2010

தென்னய வச்சா இளநீரு பிள்ளயபெத்தா கண்ணீரு :(

by Mahan Mayuran on Sunday, 10 October 2010 at 20:20

வெப் சயிற்ர திறந்தாலும் புத்தகம் ஏதும் கிடச்சாலும் எங்கயாவது அரசியல் சம்மந்தமா ஏதும் எழுதிக்கிடக்குதோ எண்டு பாக்கிறதுதான் வழமை,சும்மா வெப்ப தட்டேக்க வந்த ஒருவிசயம் மனச கொஞ்சம் கசக்கிபோட்டுது :( எங்கட இனம் பல விசயங்கள்ள கெட்டிகாறர் படிப்பு விளையாட்டு பிளைட் ஓட்டுறது ;) அதே மாதிரித் தானுங்கோ இந்த வெட்டுக் கொத்து களவு அப்பிடி நிறைய விசயங்களில அதுகும் வெளி நாட்டில சொல்லவே தேவயில்ல இந்த வெட்டுக் கொத்து எங்க ஆரம்பிக்குது எண்டு பாத்தியள் எண்டா "ஆவதும் பெண்ணால மனுசன் அழிவதும் பெண்ணால" எண்ட பாட்டுத்தான் உடன நியாபகத்துக்கு வருகுது.செத்து போனதுகள்ள நிறையபேருக்க உதுதான் றீசன்.கனடா நாடும் இந்த விசயங்கள்ள கொடி கட்டிப்பறக்கிற நாடு தான்.ரெண்டு நாளுக்கு முன்னால கனடாவில நடந்த சம்பவம் 16 வயசு பிள்ள அவாவுக்கு 18 வயசில காதலன் (ம்ம்ம் அந்த வயசில குஞ்-- பிடிச்சு வடிவா வடிவா ழூத்-- பெய்ய தெரியாது) ம் தகப்பன் பிள்ளய கானேல்ல எண்டு தேடிபோனா படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு பக்கதிலயே 2 பேரும் காதல் மயக்கத்தில இருந்து இருக்கினம் 2 பேரயும் காரில ஏத்திக் கொண்டு போறவழில காற கொண்டுபோய் மரத்தோட மோதி இருக்கிறாரு! ஓரேஅடியா போய் சேரலாம் எண்டு,யாருக்குமே எதுவும் நடக்கலல.கடசியா பொலிசு வந்து தகப்பன தள்ளி கீழ விழுத்தி விலங்குபோட்டு(படம் கீழே) கம்பிஎண்ண வக்சுட்டாங்க.தாய் தகப்பன் பிள்ளய பெத்து வளத்து பெரிய எதிர்பாபொட  சனியன பள்ளிகூடத்துக்கு அனுப்பினா,அது காதல் பண்ணி அப்பன கொண்டுபோய் கம்பிஎண்ணவக்குது. இதமாதிரித்தான் பாரீசிலயும் அப்பன் காலமயும் பின்னேரமுமா ரெஸ்ருறன்ட் ல கோப்ப கழுவ,தாய் காலமயும் பின்னேரமும் ஆபீஸ் கழுவிதுடைக்க,பிள்ளயள் பள்ளிக்கூடம் போறம் எண்டுட்டு பாக் ல காதல் பண்ணுதுகள்.பிள்ள பள்ளிக்கு வரல்ல எண்டு கடிதம் வந்தாலும் வாசிக்கு விளங்கி கொள்ளுற அளவுக்கு பாசையும் பிரச்சன,,,ம்,,,கலை,கலாச்சாரம்,பண்பாடு அதுக்குமேலால நாடு எண்டுறம்,உது எல்லாம் செத்துபோய் புதச்சு புதச்ச இடத்தில புல்லும் முளச்சிட்டுது மொத்தத்தில "எங்கட சமுதாயம் எங்கயோ போய்டுது"

canada

Wednesday, October 6, 2010

மதுரவீரன் தானே,என்ன உசுப்பிவிட்ட நீனே,,,

 ஹாய் செல்லம் ! ஐ லவ் யூ ,,,,,,உன்ன நான் நெஞ்சிலயே வச்சிகன் செல்லம், நீ இப்பிடிப் பண்ண்டியே.முன்னாடியே மாமா சொன்னேல்ல சிலோனுக்கு போவாதன்னு,கறுப்பு கண்ணாடியோட போனியே இப்ப கறுப்புகொடி காட்ட வச்சுட்டியே! அம்புட்டு பயபுள்ளயும் தலை தலையத குட்டிகிட்டானில்ல போவாதன்னு கேட்டியா? பேப்பர் காறனுகளுக்கு போறதும் போகாததும் என் விருப்பம் எண்டிருக்க,"ஊரோடில் ஒத்தோடு ஒருவன் ஓடில் பாத்தோடு" தெரியாத புள்ள உனக்கு.சிலோன் தான் போனா,மகிந்தா மாமியோட எதுக்கு புள்ள றவண்டடிச்சே? கஸ்ட படுறவங்கள போய் பாத்திருக்கா :) போட்டோக்கு போஸ் குடுத்திருக்கா ;p வேறஎதுவுமே நீ பண்ணினதா தெரியல. பிரச்சின இப்பிடி ஆகிருச்சு பாத்தல்ல :( சினிமா தான் முக்கியம் திரைப்பட விழாதான் முக்கியம் எண்டு போனியே :@ நடிகர் சங்கம் மீட்டிங்கு போட்டு பேசுறாக புள்ள நீ சிலோனுக்கு போனது பத்தி. சினிமாவ விட்டா வேற புளப்பும் தெரியாது என்ன பண்ணபோறா ? சினிமா காறனுக எல்லாமே இப்பிடித்தா புள்ள "கணேஸ்ன்னா கரணம்போடு ஐயப்பன்னா சரணம்போடு" எண்டு வாழுறவா அவக பால்டிஅடிக்கும் மட்டும் நீ என்ன பண்ணபோற பேசாம பிளைட்ட பிடிச்ச பிரான்சுக்கு வந்துடு மாமன் இருக்கன்ல ;p

asin in srilanka

Monday, October 4, 2010

நாடு (கடக்கும்) நாளைய தலைமுறை.

வாங்கோணா வாங்கோ உங்கட வரவு நல்வரவா அமயட்டும் :) பகவான் அருளால யாப்பெல்லாம் எழுதிப்போட்டியேள்.பேஸ் பேஸ் இனி என்ன? உங்கள் மூலமா தமிழ் பேசுறவாள்ட தலஎழுத்து மாறுமோன்னோ? சிரிச்சுண்டே தல ஆட்டுங்கோ ;) நாடு முழுஷா பத்தின்ட  முதலே பகவான் அருளால உருத்திர குமார் அவர்கள நேர கண்டு பேசினமோன்னோ சித்தேன்டு தெளிவு. ஆக்க பொறுத்தியேள் கொஞ்சம் தான் ஆற விர்ரீளா. கட்டமைப்பு கட்டிஇருக்கியேள், செலக்ஷன் செஞ்சிருக்யள்,நல்ல விஷயமா பண்ணீடீயேள் போங்கோ.வேளாண்மை செய்தா கழை வருமோன்னோ? சொல்லுறதெண்டு தப்பா நினைச்சுக்காதேள் கொஞ்ச அபிஸ்துகளும்  கட்டமைபுள்ள கைகோத்துட்டாள்.அவாள என்ன பண்ண போறியேள்? சரி. சின்னன் சிறுசுகள் மேம்பர் ஆயுண்டே இருக்கா,அவாள சித்தேண்டு அமுக்கி வாசிக்க சொல்லுங்கோ! பிறந்துன்டது இங்க.வளந்துண்டது இங்க.ஷெல்லடி தெரியுமோ? கீபீரடி தெரியுமோ? பேஷவிட்டியேள் பேஸா பேசுவா. நாமஎல்லாம் பட்டுண்டவாள் நமக்கே வகுப்பு எடுக்கிறியேள்.அபச்சாரம் அபச்சாரம்.நம்ம ஆத்து மண்வாசன தெரியுமோ? இல்ல ஒரு செம்பு தண்ணி தான் மோண்டியளோ? நாடுபத்தி மட்டும் பேஸா உளறீயள். இவாளுக்கு பித்துருக்கள் தான் புத்தி சொல்லனும்.நாளிகை ஆயுட்டுது நான்வரப்போறன், அக்ரகார மந்தயள எப்பிடித்தான் ஓட்டபோறியேள்.பகவான்தான் பாத்துகணும் ;p

Sunday, October 3, 2010

நாட்டயே மீட்டவனுக்கு (நாட்டாம) போட்டான் பாரு ஆட்டய ;p

 என்னம்மா கண்ணு சௌக்கியமா ? மாமியாரு வீடு எப்பிடி ஏலே ? நுளம்புக்கடி தாக்கலோ! பிச்சகாரன் லெவலுக்கு  தள்ளிவிட்டான் பாரு கூட்டாளி ;) "அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்" அது பழசு.எப்பிடி இப்ப எல்லாம் "ஆன்த ஸ்பாட்" ஏலே.ன்னாது பிள்ளையும் பாரியும் (மனைவி) பள்ளிக்கட்டு ஏறஉத்தேசமோ குடும்பத்தோட போய் முருகனுக்கா மாலைசாத்திரா.ஏலே அவனே அப்பனோடயும் ஆத்தாவோடயும் சண்ட போட்டு பழனிமலையில அம்மணமா நின்டவனெல. நீ நவாலில குண்டு போட்ட  நேரம் அவன் கோயில் வாசல்ல எத்தன உடல்சிதறி கிடந்நதத பாத்தம் ஏலே :( வப்பான் பாரு ஆப்பு இந்த யென்மத்தில நிமிரமாட்டிஎல.எத்தன உயிர குடிச்சவ ஏலே நீநு :( ஆண்டவதான் உன்ன சும்மா விடுவானா ? பதில் சொல்லனுமெல.சொல்லிதா ஆகனும்.எத்தன வாட்டி புலி உனக்கு சீவினான் ஆப்பு அத்தன வாட்டி நீ தப்பினது எதுக்கெல! உன் கைதான் உனக்கு குத்தணு எண்டு எழுத்தெல ;) எத்தன குழந்தகள துடிக்க துடிக்க கொண்டா.உயிரெண்டா உனக்கு அவள கேவலமா போச்சா. மரணம் என்டா என்னானு புரியுமா உனக்கு.ஊரவ புள்ளய பலி கொடுத்து வெற்றி கொட்டினவ தானே நீநு.பாத்தமல மரண பயம் பாத்த.நீ எலச்சனுல தோத்தநேரம் மகிந்த ஆளுக உன்ன றவுண்டுகட்ட trans asia hotelல மாடிக்கு மாடி தாவினா இல்ல.அப்ப பாத்தமல உன் மூஞ்சில மரணபயம்.கண்ட நின்ட நாட்டுட கால்ல விழுந்தியே காப்பாதுக காப்பாத்துக எண்டு கெஞ்சினாயே அதுக்கு ஒருமுழம் கயித்தில தூக்கு போட்டிருக்கலாமில ;) என்னமோ நாட்டயே மீட்ட உனக்கு நாட்டாம போட்டான் பாரு ஆட்டய ;p புலி அப்பவே சொல்லுவா எல.அகலகால் பதிக்குது றாணுவம் எண்டு.இப்ப சொல்லுற ஏல "அகலகால் வச்சா அண்டவயர் கிளியும்"

Wednesday, September 29, 2010

மயூ(vukku)குசும்பமைப்பு,,

கொஞ்சநாளா கூட்டமைப்புகாறர் பிளையிற் ஏறிஇறங்கிறதே வேலையாபோச்சு^^^ போனமாம் நாடுகள பாத்தமாம் வந்தமாம் எண்டு இருக்கவேணும் :-) சும்மா அறிக்கையள விட்டு இப்பதான் கொஞ்சம் பெருழூச்சுவிடுற சனங்களுக்கு ஆயுதம் முடிஞ்சுது,அரசியல் திரும்புது எண்டு திரும்பவும் தலையில மண்ணள்ளி போடுறவேலைய பாக்கம இருந்தா சந்தோசம்.அரசியல்ல தாங்கள் இருக்கிறத சனம் மறந்துபோகுங்கள் எண்ட பயமும் இருக்குது ;p அதுக்காகவே சிலபேர் அறிக்கை விடுறதும் பாத்திருக்கிறன் ;@ படுக்கைக்கு போகேக்க ஒண்டும் படுத்தெழும்பி வந்தா வேறஒண்டும் இவயுன்ர அறிக்கையள என்னெண்டுதான் சொல்லுறது.கொஞ்ச காலமா ஏகபிரதிநிதிகள் நாங்கள் எண்டுச்சினம் ! இப்ப கேட்டா அவை யாரு எண்டுகேப்பினம் :( என்னதான் இருந்தாலும் உதுக்குள்ள பலபேர் சூரியதேவனுக்கு காலம் முழுக்க கடமப்பட்டு இருக்கினம்: இருக்கிற பதவி அவர்போட்ட பிச்சை தானே ;D  கிழக்கு பக்கமா அரிவடை செய்யுற கூட்டமைப்புகாரர் கொஞ்சநாளா ழூச்சு பேச்சு இல்லாம கிடந்தவர் இப்ப கொஞ்சம் கலையாடப்பாக்கிறார் :§) அவர வினாயகப் பெருமானும் கருணை அம்மனும் அடக்கிபோடுவினம் ;p கேட்டா பச்ச கட்சிகாரர் இருமுகம் காட்டினமாம்,நீங்கள் பலமுகம் காட்டேக்க சகோதர மொழிபேசுறவயள் இருமுகம் காட்டுறது ஒண்டும் தப்பில்லதானே,, என்னவோ எங்கட சனத்தின்ர பாடு "ஒருமுகமோ பலமுகமோ முகம்முழுதும் கலவரமோ" எண்டு கலவரத்திலதான் தொடரபோகுது,,,,, :(


உலகத்தமிழர்வாழ்வுரிமை மகாநாடு 2009 Germany.

மயூ(வின்)மனசில,,,

by Mahan Mayuran on Wednesday, 29 September 2010 at 00:16

யாழ்பாணம் அரியால வயல்பக்கமா  ஒரே சனக்கூட்டமா கிடக்குது போட்டோவில,, என்னதான் எண்டு பாப்பம் எண்டு திறந்தா ஏர் பூட்டுவிழாவாமெல்லே ;)  விழாஎண்டா சொல்லவே வேணும், நிவாரணம் முதல் கோயில் பொங்கல் திண்டுறமட்டுக்கும் கியூவில நிண்ட கூட்டம்தானே நாங்கள் ;p சரிவிடுங்கோ விழா கோலா அகலமா தான் நடந்திருக்கு (கோல்போட்டு கேட்டன் மாம்பழம் சந்தில உள்ள மனுசனுக்கு)  கோல்போட்டு இனிஉழ தொடங்கதான் வெளியவரப்போகுது எங்கட உறவுகளுன்ர எலும்புக்கூடுக்ள் :( தாட்டது எப்பிடியும் வெளியவரத்தானே வேணும், இல்ல ஆமிமாமாமார் கிளறினா பிரச்சினை எண்டு தாங்களே கிளறி இப்ப பதப்படுத்திப்போட்டு போமாலிற்ரிக்கு ஒருகொன்டாட்டமோதெரியாது,, கொண்டாடதில ஏர் ரக்ரரு லான்டுமாஸ்டரு எண்டெல்லாம் குடுத்து இருக்கினம் ;D வித நெல்லுமா மெல்லே கொடுத்து இருக்கினம் விளைச்சல் அமோகமாதான் இருக்கும் உலகத்திலயே கிடைக்காத பசளை அந்த மண்ணுலதான் ரொம்ப கிடக்குது, ம்,, ஏதோ எங்கட அமச்சர்ஐயாஇருக்கிறதால கிடைக்கிறத பெற்றுக்கொடுக்கிறார் ;p இல்லாட்டி சனம் எங்கதான்போகும் நாண்டுகிட்டு நிண்டு செத்துபோடுங்கலெல்லே ;(

ஏர் பூட்டுவிழா
· · Share

    • Vigithan Sokka nalla poodduvidda poo,,,,,,
      22 hours ago · · 1 personLoading...
    • Suthan Raj fine
      22 hours ago ·
    • Sangeetha Packiyarajah ‎:)உண்மைகள் உறங்குவதில்லை..
      10 hours ago ·
    • Vithi Eraivan well said...
      8 hours ago ·
    • Hemamuhunthini Jesuthasan Manathil ullathai appadiyee kooriyulleerkal.
      8 hours ago ·
    • Mahan Mayuran நன்றி எல்லாருக்கும்.நான்ஏதோ கிறுக்கிறதுக்கு காரணம் சங்கீதா அக்கா.தான் அவாவ பாத்துதான் ஆசவந்துச்சு கிறுக்க. மிக்க நன்றி ஷாலுக்குட்டி ;D
      5 hours ago ·
    • Sangeetha Packiyarajah ஆஹா.. மனசத் தொட்டுட்டீங்களே - ஷாலுக்குட்டி
      5 hours ago ·